Thursday, October 1, 2009

சாட்டையடி வீரன்!

வணக்கம்!

சமீபத்தில் பிரிட்டிஷ் காமிக்ஸ் பிதாமகர் ஸ்டீவ் ஹாலண்ட்-ன் தளத்தில் கண்டதொரு துயரச் செய்தியின் விளைவே இப்பதிவு!

கார்லோஸ் கேப்ரியல் ரெளம் (CARLOS GABRIEL ROUME) எனும் காமிக்ஸ் ஓவியரின் மரணச் செய்தியே அது!

இவர் நமக்கு மிகவும் பரிச்சயமானவர் ஆவார்! ராணி காமிக்ஸில் வெளிவந்த சாட்டையடி வீரரின் சாகஸங்கள் இவரது கைவண்ணத்தில் உருவானவையே!

சாட்டையடி வீரரின் கதைகளில் தென்படும் இவரது உயிரோட்டம் நிறைந்த பாணி தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானதே! வேறு சில பல கெளபாய் கதைகளுக்கும் இவர் தனது பாணி ஓவியங்கள் மூலம் உயிரூட்டியிருப்பது இன்றும் நம் நினைவில் நிற்கிறது!

இதோ அவரது நினைவாக சாட்டையடி வீரரின் ராணி காமிக்ஸ் அட்டை படங்கள்!

Rani Comics Issue 10 Dated Nov 15 1984 Saattaiyadi Veeran Rani Comics Issue 24 Dated June 15 1985 Puratchi Veeran Rani Comics Issue 64 Dated Apr 1 1987 Satta Virodhi Rani Comics Issue 105 Dated Nov 1 1988 Ragasiya Kollaikaaran

இதோ உங்கள் பார்வைக்கு ஒரிஜினல் அட்டைப் படங்கள்! மொத்தமாக வந்த சாட்டையடி வீரர்களின் கதைகளின் எண்ணிக்கை நான்கு மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது! இவற்றை நமக்கு தமிழில் அறிமுகப் படுத்திய ஆசிரியர் திரு.S.ராமஜெயம் அவர்களுக்கு இந்த தருணத்தில் நாம் நன்றி கூறுவது பொருத்தமாகவே இருக்கும்!

Cowboy Picture Library 404 The Gun Tamers Cowboy Picture Library 412 The Gun Tamers The Rebel Cowboy Picture Library 424 The Gun Tamers way of an outlaw Cowboy Picture Library 432 The Gun Tamers the defenders

அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய தமிழ் காமிக்ஸ் உலகின் சார்பாக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்!

வெகுமதி:

சாட்டையடி விரர் மற்றும் அவரது நண்பர்களின் பெயர்களை சரியாக கூறுபவர்களுக்குப் பரிசு தர இயலாவிடினும் பாராட்டுக்கள் நிச்சயம் உண்டு!

இவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ்காணும் சுட்டிகளை பயன்படுத்தவும்!

இப்போதைக்கு அவ்வளோதான்,
மீண்டும் சந்திப்போம்!

10 comments:

  1. Welcome back Dr. Looks like the holidays at home has done a world of good to your posting. Thanks for the info. Few more pounds damage to my wallet :-(

    I guess we can safely assume that any unknown character/story published in Tamil has come from a British source.

    Keep up the good work!!!

    ReplyDelete
  2. Hi,

    Superb. Very sad to hear about the loss of another Comics Writer.

    They are my fav heroes. I can easily recite their names anytime. Philip, Leo and Simon. Well, that's how i knew them.

    Nice Scans.

    ReplyDelete
  3. தலைவர் அவர்களே தகவலிற்கு நன்றி. தொடருங்கள் உங்கள் அதிரடிகளை.

    ReplyDelete
  4. very sad to note that he is no longer here.

    am a great fan of this particular series.

    their names are Leo, simon and philip and surnames were not given.

    would love to know their actual names as appearing in the british books. can you help?

    ReplyDelete
  5. now only i saw that somebody actually has given their name. i have given their name in the right order. so what is the prize & whem will i get that?

    ReplyDelete
  6. in fact ramajayam has to be appreciated for the selection of these stories.

    just have a look at the titles and you will know that how aptly he has chosen the tamil titles. hats off to him.

    ReplyDelete
  7. அண்ணாருக்கு எமது சார்பிலும் காமிக்ஸ் நண்பர்கள் சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலி.

    தகவலுக்கு நன்றி தலைவரே.

    ReplyDelete
  8. அருமையான அட்டைப்பட ஸ்கான்கள். ஆங்கில அட்டைப் படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

    இப்படியாக ஒவ்வொரு கதைக்கும் நீங்கள் அதன் ஆங்கில அல்லது ஒரிஜினல் கதைகளை வைத்துக் கொண்டு இருப்பதை கண்டு பொறாமை படுகிறேன்.

    எப்படி கண்டுபிடிக்கிறீர்கள்? பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் பாட்டு நியாபகம் வருகிறதா? (லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு பாட்டு அல்ல)

    புரட்சி வீரன் கதையில் இந்த கட்டம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.

    ReplyDelete
  10. ஜூடோ ஜோஸ், VEDHA

    சரியான விடை கொடுத்ததற்கு பிடியுங்கள் பாராட்டுக்களை!

    ஜாலி ஜம்பர் அவர்களே,

    //டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் பாட்டு நியாபகம் வருகிறதா? //

    மறக்க முடியுமா?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!